யுத்தத்திற்கு பின்னர் அதிகமான மரணங்கள் வீதி விபத்துக்கலாளேயே ஏற்படுகின்றது - ஷிப்லி பாரூக்

அஹமட் இர்சாட் -
முப்பது வருட யுத்தகாலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்கு பின்னர் அதிகாமான மரணங்கள் ஏற்படுவது வீதி விபத்துக்கலாளேயாகும் என (காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட) காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் 2016.04.19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்கின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸார்,உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன் காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எஸ்.எம். ஜாபிர் பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளாக காத்தான்குடியில் வீதி விபத்துக்களை குறைக்க மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக 2016.05.10ஆம் திகதிக்கு முன் காத்தான்குடியில் இருக்கின்ற வீதிக் கடவைகளினதும், பிரதான வீதிக் குறுக்குகளுக்கும் வேகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தல், வீதியின் இருமருங்கிலும் காணப்படும் காண்களை ஜுலை மாத இறுதிப்பகுதிக்குள் மூடி இடுதல், வேக கட்டுப்பாடு முன்னால் இருக்கின்றது என்பதனை அடையாளப்படுத்த குறியீட்டு பலகைகளை நடுதல், மஞ்சள் கடவையை அன்மிக்கும் முன்பாக மஞ்சள் கடவை குறியீட்டு பலகையை இடுதல் ஒற்றை நாள் இரட்டை நாள் வாகன தரிப்பு முறைமையை அமுல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டமொன்றை நகர சபை மற்றும் பொலிசார் இணைந்ததாக நடாத்தி அதன் அடிப்படையில் ஒற்றை நாள் இரட்டை நாள் வாகன தரிப்பை ஏற்படுத்தல். 

பிரதான வீதியை வந்து சேருகின்ற உள்ளக பாதைகள் பிராதன வீதியை அடையும் இடத்தில் இருமருங்கிலும் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதை தடைசெய்தல் எதிர்காலத்தில் வீதி சமிக்சை விளக்குகள் நடுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல் கண்காணிப்பு கமராக்களை எதிர்காலத்தில் நடுவதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தல். 

மற்றும் வெள்ளி, ஞாயிறு தினங்களில் கூடுதலான போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தல் போன்ற விடயங்களை துரித கதியில் மேற்கொள்வதற்கு முடிவுகள் குறித்த கலந்துரையாடலின் பொழுது எடுக்கப்பட்டன.

கடற்கரை வீதியிலும் வேக தடுப்புக்களை உரிய இடங்களில் ஏற்படுத்துதல, பழைய கல்முனை வீதி, அல்ஹிரா பாடசாலைக்கு முன்பாக வேக குறைப்பு தடுப்புக்களை ஏற்படுத்துதல் பிரதான வீதியின் இரு ஈச்சமரங்களுக்கிடையிலுள்ள இடைவெளிகளுக்கு பாதசாரிகள் குறுக்கால் கடக்கா வன்னம் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை பரீட்சிக்கும் முகமாக நெட் முலம் மறைத்தல் இது போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டதோடு இதனை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்படும் வரை பிரதேச செயலாளர் தொடர்ந்து கண்காணிப்பது என்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -