மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் மஹிந்தவின் மனைவின் கழுத்தில்..??


இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட ராஜபக்சர்களின் தங்கம் என்ற தலைப்பில் பல இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு விடயமாகும்.

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் எங்கு உள்ளது என்பது தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள் தீவிர விசாரணைகளை முடக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் அவ்வாறு கொள்ளையடித்த தங்க நகைககள் இலங்கையின் முன்னாள் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பல்வேறு மேசடி தொடர்பில் ராஜபக்ஷர்களிடம் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது. இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் தங்க ஆபரணங்களின் மதிப்பீடு தொடர்பில் முரண்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிதி குற்றப் புலனாய்வு பிரிவு புதிய முறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷிரந்தி ராஜபக்ச ஒரு ஆபரணத்தை ஒரு முறை பயன்படுத்தினால் அதனை மீண்டும் பல காலங்களின் பின்னரே பயன்படுத்துவார். அதற்கு ஷிரந்தியின் அனைத்து புகைப்படங்களும் சாட்சியாக கூறப்படுகின்றது.

எனினும் தற்போது வரையில் குறித்த தங்க ஆபரணங்களில் மிகவும் பெறுமதியானவைகள் மற்றும் வைர கற்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பல ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன.

அது தொடர்பில் தகவல் எதுவும் இல்லாத நிலையில், கடந்த காலங்களில் எடுத்த புகைப்படங்களில் உள்ள ஆபரணங்கள் தொடர்பிலான தகவல்களும் ஷிரந்திக்கு நினைவில் இல்லை. எனினும் மேலும் பல நிதி மோசடிகள் தொடர்பிலான சாட்சிகள் அதன் மூலம் வெளியாகிக் கொண்டுள்ளது.

விடுதலை புலிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தங்கம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரிந்த போதிலும், அவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றதான தடயங்களை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் புதிய விசாரணையின் ஊடாக வெகு விரைவில் ஷிரந்தி ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார் என இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை விடுதலைப் புலிகளிடமிருந்து கொள்ளையடித்த பெருந்தொகை தங்கத்தை ஜப்பான் நிறுவனம் ஒன்றிடம், மஹிந்த தரப்பு விற்பனை செய்ததாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -