அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது கிளைகள் அங்குராப்பணம்..!

எம்.வை.அமீர்-
நாட்டின் நாலாபக்கங்களிலும் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் கிளைகளை உருவாக்கி அதனூடாக பிரதேச மற்றும் மாவட்ட மட்ட அமைப்புகளை உருவாக்கிவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதிலும் கிராம மட்ட கிளைகளை அங்குராப்பணம் செய்து வருகின்றது அதன் ஒரு அங்கமாக சாய்ந்தமருது 02,04,14 ஆகிய பிரிவுகளுக்கான கிளைகள் அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு குறித்த பிரதேசங்களில் கடந்த 2016-03-31 ஆம் திகதி இடம்பெற்றது. 

இந்நிகழ்வுகளுக்கு கிழக்குமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சமூ சிந்தனையாளருமான அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்..

இந்நிகழ்வுகளில் சாந்தமருது 02 ஆம் பிரிவுக்கான நிருவாகிகளாக

தலைவர் : எம்.வி.எம். மாஹிர்
செயலாளர்: ஏ,ஜி.எம்,ஜலீல்
பொருளாளர்: ஜெ.எம்.அஷ்பாக் உள்ளிட்ட குழுவினரும்

சாந்தமருது 04 ஆம் பிரிவுக்கான நிருவாகிகளாக

தலைவர் : யூ.எல்.எம்.ஷபீக்
செயலாளர்: எஸ்.எம்.ஜவ்பர் 
பொருளாளர்: ஆர்.எம்.மர்சூக் உள்ளிட்ட குழுவினரும்

சாந்தமருது 14 ஆம் பிரிவுக்கான நிருவாகிகளாக

தலைவர் : எம்.ஐ.ஜெமீல்
செயலாளர்: எஸ்.எம்.எம்.சிரான் 
பொருளாளர்: ஏ.எம்.ஜஹான் உள்ளிட்ட குழுவினரும் தெரிவு நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -