திருகோணமலை தமிழ் விவசாயிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு...!

திருகோணமலை மூதூர் படுகாடு பகுதியிலுள்ள தமிழ் விவசாயிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் விவசாயிகளுக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகள் நெல் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் 2006ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் விவசாயிகள் குறித்த பகுதிகளுக்கு செல்ல முடியாதளவுக்கு அத்துமீறிய வேளாண்மை நடவடிக்கையில் சிங்கள் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட முற்பட்ட போது சிங்கள விவசாயிகளினால், தமிழ் விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது பகல் நேரங்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுதுள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தங்களுக்கான அச்சுறுத்தல் தொடர்வதாக தமிழ் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -