பாலமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழுவின் அமைப்பாளர் பி.எம்.ஹீஸையிர் (D.D.O) தலைமையிலான குழவினரின் அழைப்பை ஏற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் நேற்று திங்கட்கிழமை (4) மாலை பாலமுனை ஜீம்ஆப் பெரிய பள்ளிவாலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல்லாஹ் மஹ்றூப் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற பொலிஸ் உயர் அதிகாரியுமான எஸ்.எஸ்.பி.மஜீத், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஜெமீல், கட்சியின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜியார் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனால் பாலமுனை ஜீம்ஆப் பெரிய பள்ளிவாசல் கட்டுமானத்திற்கான பத்து இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையினை பள்ளிவாசல் தலைரும் ஓய்வுபெற்ற தபாலதிபருமான யு.எல்.அபுபக்கரிடம் கையளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் நீதவானும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.அப்துல் க'ர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார்.