அம்பாரை மாவட்ட கரையோர தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைப்பு...!

எஸ்.எல். அப்துல் அஸீஸ்-
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அம்பாரையில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தினால், அம்பாரை மாவட்ட கரையோர தனியார் பஸ் உரிமையாளர்களிடம் காட்டப்பட்ட கெடுபிடிகள் மற்றும் தீவிரப்போக்குடைய செயற்பாடுகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்கினால் தீர்த்து வைப்பு. கல்முனை பிராந்திய தனியார் பஸ் கூட்டமைப்பினர் நன்றி தெரிவிப்பு.

அன்மைக்காலமாக அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசம்களை மையப்படுத்தி போக்குவரத்துப்பணிபுரியும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் அம்பாரையில் உள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட காரியாலயமானது, அங்கு கடமைநிமிர்த்தம் செல்லும் தனியார் பஸ் உரிமையாளர்களின் காரியங்களை செயற்படுத்துவதில் கெடுபிடிகள், மற்றும் தீவிரப்போக்குடைய தன்மைகளை வெளிப்படுத்தியதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் இவ்விடயத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்கின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக கல்முனை பிராந்திய தனியார் பஸ் லிமிடட் கூட்டமைப்பின் தலைவர் எ.அரூஸ் தெரிவித்தார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்து போக்குவரத்து அதிகாரசபையின் அம்பாரை மாவட்ட காரியாலயத்திற்க்கு புதிய மாவட்ட முகாமையாளர் ஒருவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்ததன்மூலம் எங்களது பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன். 

இந்த செயட்பாடு அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதே வீதிப் பயணிகள் போக்குவரத்தை சிறப்பாக செயற்படுத்த உதவியுள்ளது என கல்முனை பிராந்திய தனியார் பஸ் லிமிடட் கூட்டமைப்பின் தலைவர் எ.அரூஸ் மேலும் தெரிவிதார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -