தனக்கு எதிராக எத்தனை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தாலும் தான் பயப்படப் போவதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற உற்சவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றாலும் நான் பயப்படும் பெண் இல்லை. நாங்கள் பணத்திற்கு விலை போகாதவர்கள். நாங்கள் பணத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பணத்திற்காக வேலை செய்பவர்கள் யாரென்று எனக்குத் தெரியும். இது சம்பந்தமாக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பேன். ஏனெனில் எனக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிறையவுள்ளதாகவும் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அத்துடன் லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினர் விசாரணைக்கு அழைத்தால் “ஐயோ என்னைப் பாம்புக் கடித்து விட்டது இன்று என்னால் அங்கு வரமுடியாது“ என்ற கூறுபவர்கள் எங்களது ஆட்சியில் இல்லை. விவாகரத்து வழக்குக்காக கணவனிடம் உள்ள சொத்துக்களைப் பற்றி காட்டிக் கொடுக்கும் பெண் அமைச்சர்கள் எங்கள் ஆட்சியில் இல்லை.
விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் சென்று அவர்களின் தங்கங்களைக் கொள்ளையடித்து தங்க ஆபரணங்கள் செய்பவர்கள் எங்களது ஆட்சியில் இல்லை என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.