நிஸ்மி-
முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (24) காலை அக்கரைப்பற்று வருகை தருகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழுத் தலைவரும், அமைப்பாளரும், அமைச்சா தயாகமகேயின் அக்கரைப்பற்று இணைப்பாளருமான எம்.எம்.எம்.நிஸாம் அவர்களின் அழைப்பை ஏற்று அக்கரைப்பற்றுக்கு முற்பகல் 11.00 மணிக்கு வருகை தரும் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முதலில் அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளிவாயலுக்கும், முற்பகல் 11.30 மணிக்கு அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிக்கும் 12.00 மணிக்கு அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளி வாயலுக்கும் வருகை தந்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், செயலாளர் மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடனும் பள்ளிவாயல்களின் செயற்பாடுகள், தேவைகள் முஸ்லிம் சமய கலாசார அபிவிருத்தி பற்றியும் கலந்துரையாடியபின் ஜும்ஆ பெரிய பள்ளி வாயலில் ளுஹர்த் தொழுகையிலும் கலந்து கொள்வார்.
அதன் பின்னர் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயலுக்கும் சென்று பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், செயலாளர் மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழுத் தலைவரும், அமைப்பாளரும், அமைச்சா தயாகமகேயின் அக்கரைப்பற்று இணைப்பாளருமான எம்.எம்.எம்.நிஸாம் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.