மேற்கிந்திய தீவுகள்: வெற்றிக்கு பின்னால் உள்ள கண்ணீர் கதை - சாமுவெல்ஸ்

னக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை வார்னேவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ்.

6-வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மேற்கிந்திய தீவுகள்.

இதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி 

“கடவுளுக்கு நன்றி. நாங்கள் தொடர்ந்து பிராத்தனைக் செய்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாருமே நம்பவில்லை. எங்கள் கிரிக்கெட் வாரியம் எங்களை அவமதித்தது. ஜெர்ஸி கூட இல்லாமல் தான் நாங்கள் இந்தியா வந்தோம். ஆனால் எங்கள் நாட்டு மக்களுக்காக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டோம்.

நிக்கோலஸ் (இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்) எங்களை மூளை இல்லாதவர் என்று கூறினார். ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிப் பெற்றுள்ளோம். நாங்கள் மீண்டும் எப்போது சேர்ந்து விளையாடுவோம் என்று தெரியவில்லை. பயற்சியாளர் உட்பட அனைவருக்கும் நன்றி. மேற்கிந்திய தீவுகள் அனைவரும் சாம்பியன் தான்.” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் சாமுவெல்ஸ். இதற்காக அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் அவுஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளர் வார்னே.

ஆனால் இன்று சிறப்பாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற உதவினார் சாமுவெல்ஸ். இதற்காக அவருக்கு ஆட்டநாயன் விருது அளிக்கப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை வார்னேவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -