உலகம் முழுவதிலும் உழைக்கும் பாட்டாளி மக்கள் மே 1 ஆம் திகதியான இன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டடுகின்றனர். இன்றைய தினத்தில் இலங்கை மக்களாகிய நாமும் இணைந்து கொண்டு நாமும் அந்தத் தினத்தை அனுஷ்டிக்கின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் சுரங்கத் தொழிலாளர்கள் நடாத்திய போராட்டத்தின் விளைவே தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் இந்தத் தினத்திற்கு முன்னுரிமை அழிக்கப்பட்டு அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கப்படுகின்றது.
நாட்டின் முதுகெலும்பான தொழிலார்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது.
ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் நல்லாட்சி அரசாங்கத்தில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலன்கள் வழங்கப்பட்டாலும் தீர்க்கப்படாத இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதை மறுக்க முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிக்கட்சி என்ற முறையில் அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாம் தயங்கப்போவதில்லை.
நாம் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதனைத் தீர்ப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை உறுதியுடன் கூற விரும்புகின்றோம். தொழிலார்களின் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்.