கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இம் மாதம் 27ம் திகதி வரை தொடந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005.12.25 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.