முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பிரசன்னமானார்.
சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று ஜீ.எல்.பீரிஷ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தை அரசாங்கம் மறைக்க முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்கச மற்றும் சீ. பீ ரத்ணாயக்க ஆகியோரும் உடன் சென்றனர்.
சாவகச்சேரி – மரவன்புலவு பகுதியில் குறித்த தற்கொலை அங்கியும், வெடிபொருட்களும் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.