பிரபல சிங்கள திரைப்பட நடிகர் விஜய குமாரதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் புதல்வரான விமுக்தி குமாரதுங்கவை நீண்டகாலத்திற்கு பின்னர் நேற்று அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விமுக்தியின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 100 ஜனன தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அவர் தனது தயாருடன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் கலந்து கொண்ட விமுக்தி குமாரதுங்கவுக்கு அரசியல்வாதிகள் பெரும் வரவேற்பளித்தனர்.
எவ்வாறாயினும் விமுக்தி குமாரதுங்கவுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை என பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டது.
விமுக்தி இங்கிலாந்தில் கால்நடை மருத்துவராக பணிப்புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், விமுக்தி நேற்றைய தினம் அரசியல் நிகழ்வில் கலந்த கொண்டமையானது அவரது அரசியல் வருகையின் ஆரம்பமாக இருக்கலாம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய குமாரதுங்க இலங்கை மக்கள் கட்சியின் தலைவராக 80ம் ஆண்டுகளில் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.