எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஷர்ரத் அவர்களிட்கு 2016.04.05ம் திகதியன்று சில விஷமிகளால் தலையீட்டால் வழங்கப்பட்ட திடீர் இடமாற்றத்தினை இரத்து செய்தமைக்கு விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸிற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேனர்.
கடந்த 2016.04.05ம் திகதியன்று வழங்கப்பட்ட இடமாற்றத்தினை இரத்துச் செய்யக் கோரி பொத்துவில் பிரதேச மக்கள் மற்றும் உலமா சபையினர் இணைந்து மேற்கொள்ளவிருந்த கண்டன பேரணியினை அறிந்த பிரதியமைச்சர் உலமா சபையினருடன் தொடர்பு கொண்டு தான் இடமாற்றத்தினை இரத்துச் செய்து தருவதாக வாக்குறுதியளித்ததுடன் கண்டனப் பேரணியை கைவிடும் படியும் சீனா விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் கலந்துரையாடி முடிவு ஒன்றை பெற்றுத் தருவதாகவும் கூறினார். இதன் பிரகாரம் பொதுநிருவாக அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட பிரதேச செயலாளருக்கும் சில பிரதேச அரசியல் வாதிகுளக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இவ்விடமாற்றத்திற்கான காரணம் எனக் கூறப்படுகின்றது.
இவ்விடமாற்றத்தை இரத்துச்; செய்வதற்கு உதவிய சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோருக்கு பொத்துவில் உலமா சபை மற்றும் பொத்துவில் மக்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேனர்.