உலகளாவிய ரீதியில் இன்றைய நாளில் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கடந்த 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார தினமாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன இந்த வருட சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
உலகம் முழுவதிலும் 422 மில்லியன் பேர் நீரிழிவு தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மக்கள் தொகையில் 11.5 வீதமானவர்கள் நீரிவினால் அவதியுறுவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார் என்பட்பும் குறிப்பிடத்தக்கது.