சமூகப் பிரச்சினைகளைக் கூறும் ஊடகங்களுக்கு உதவுவவது சமூகத்தின் கடமை - என்.எம்.அமீன்

மூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் சமூகத்தின் அபிலாசைகளைச் சொல்லும் பத்திரிகைகளுக்கு உதவுவது சமூகத்தின் சகல மட்டத்தினரதும் கடமையாகும் என நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் கூறினார்.

நவமணி பரிசுமழை பரிசளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
நவமணி இந்த நாட்டினுடைய முஸ்லிம் சமூகத்தால் நடாத்தப்படுகின்ற ஒரேயொரு தேசியப் பத்திரிகை. 20ஆவது ஆண்டு நிறைவை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையில், இந்தப் போட்டியின் மூன்றாவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழாவுக்கு வருகை தந்துள்ளீர்கள். 

இந்த நாட்டிலே 1882 ஆம் ஆண்டு மர்ஹும் சித்திலெப்பை முஸ்லிம்களுக்காக ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அன்று தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை விழிக்கச் செய்வதற்காகவும், கல்வியைப் பெறச் செய்வதற்காகவும் பாடுபட்டு கருத்துக்களை உருவாக்கி உழைத்தவர். அன்றிலிருந்து இந்த வருடம் மே மாதம் வரை முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டில் தினசரி இல்லாத நிலையில் நாங்கள் நவமணி மூலம் இந்தப் பணியை இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக, இந்த நாட்டின் தேசிய ஐக்கியத்தை வளர்ப்பதற்காக நாளாந்த பத்திரிகையாக வெளிக் கொண்டு வந்தோம். 

இன்று நவமணியிலே நடாத்தப்பட்ட போட்டியிலே வெற்றி பெற்ற நீங்கள் பரிசில்களைப் பெறுவதற்காக சமூகமளித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் , நவ மணிப் பத்திரிகையைப் பற்றி நான் ஒரு சில வார்த்கைளைக் கூற விரும்புகின்றேன்.

இந்த நாட்டிலே, இந்த சமூகத்தினுடைய குரலாக, பல சிரமங்களுக்கு மத்தியில், சகோதர் றிஸ்வி தலைமையில் நாங்கள், இந்த முஸ்லிம் சமூகத்துடைய தேவையை உலகுக்கு எடுத்துச் சொல்வதற்காக நவமணியை பல சிரமங்களை எதிர் கொண்டு நாளிதழாகக் கொண்டு வந்திருக்கின்றோம். இதனை வளர்த்து கைதூக்கி விடுவது இந்த சமூகத்துடைய கடமை. குறிப்பாக வர்த்தக சமூகத்துடைய கடமை. ஏனெனில், நாங்கள் 1200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். 

எங்களுடைய மூதாதையர்கள், இந்த நாட்டிலே வாழுகின்ற சிங்கள மக்களோடும், தமிழ் மக்களோடும் ஒற்றுமையாகவும், கௌரவமாகவும் வாழ்ந்து வந்தார்கள். அண்மைக்காலமாக அந்த சமூகத்துடைய இருப்புக்கு சவால் மேற்கொள்ளப்பட்ட போது, இந்த சமூகம் எங்கே செல்வது என்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. 

அப்போதுதான் இந்த சமூகத்துடைய குரலாக நவமணி பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தீ வைப்புகளுக்கு மத்தியில், எங்கள் நிறுவனத்தை உடைத்து நாசமாக்கியதற்கு மத்தியிலும் இந்தப் பத்திரிகையை சமுதாயத்தின் குரலாக தொடர்ந்து வெளியீட்டு வருகின்றோம். இருக்கின்ற பத்திரிகையை, எதுவும் செய்யாவிட்டாலும் குறைந்த பட்சம் வாங்கிப் படித்தாவது இதனை கைதூக்கி விடவேண்டும். 

இதைக் கூறுவதற்குக் காரணம் இருக்கின்றது. ஒரு சமூகத்துடைய கருத்துஇ ஒரு சமூகத்துடைய எதிர்பார்ப்பு, அபிலாசைகளை அந்த சமூகத்துடைய பத்திரிகையின் மூலமாகத்தான் வெளிவரும். 

இந்த ஊடகம் மூலமாகத்தான் நாங்கள் உரத்துச் சொல்லாம். ஆகவேதான் இந்த சமுதாயத்துக்கு ஒரு பத்திரிகை அல்ல பல பத்திரிகைகள் தேவை. இன்று இந்த நாட்டிலே 49 வானொலிகள் இருக்கின்றன. இதுவரைக்கும் முஸ்லிம்களுக்காக ஒரு வானொலி இல்லை. இப்பொழுதுதான் செரண்டிப் என்ற புதிய வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டு இணையம் வாயிலாக அது ஒலிபரப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

 மற்றும் இனிவரும் காலத்தில் உதயம் என்ற தொலைக்காட்சியும் விரைவில் வர இருக்கின்றது. இது சமூக முயற்சிகள். இந்த சமூகத்தினுடைய பின்னணியிலே இருக்கின்ற சிலர் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான் இந்தச் சந்தர்ப்பத்திலே இந்த நவமணியை வளர்ப்பது நவமணியை மட்டுமல்ல இந்த முஸ்லிம் சமூகத்துக்காக வெளிவருகின்ற பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டும்.

சமூகத்துக்காக வருகின்ற பத்திரிகைகள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சமூகத்துடைய பிரச்சினையை சொல்கின்றன. சமூகத்துடைய தேவையைச் சொல்கின்றன. சமூகத்துக்குத் தேவையான அறிவூட்டல்களைச் சொல்கின்றன. இந்த சமூகத்துக்கு குரல் கொடுக்கின்ற ஊடகங்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது சமூகத்தின் கடமை என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -