எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர்சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக்கூட்டம் 2016-04-07 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் கடந்த ஆண்டில் தலைவராக செயற்பட்ட வை.முபாறக் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்து கொண்டிருந்த அதேவேளை பதிவாளர் எச்,அப்துல் சத்தார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் ஊழியர் மேன்பாட்டு நிலையத்தின் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெசீல் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பி.எம்.முபீன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் உதவிப் பதிவாளர் ஐ.எஸ்.நர்சித் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
இரண்டு பகுதிகளாக இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகள் கலந்துகொண்ட நிகழ்வு முதலாவதாக இடம்பெற்று முடிவடைந்தது. பின்னர் இரண்டாவது அமர்வில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான நிருவாகிகளின் தெரிவு இடம்பெற்றது. குறித்த தெரிவில் சில பதவிகளுக்கு வாக்களிப்பின்றியும் சில பதவிகளுக்கு வாக்களிப்புடனும் தெரிவுகள் இடம்பெற்றன.
2016/2017 ஆம் ஆண்டுக்கான தலைவராக வை.முபாறக் மீண்டும் அதிகப்படி வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக ஏ.எம். நஸ்வியும் பொருளாளராக எம்.எம்.காமிலும் உபதலைவராக எம்.சீ.ஏ.கபூரும் உப செயலாளராக எம்.இசட்.எம். றிசானும் உப செயலாளர் பிரயோக விஞ்ஞான பீடம் எம்.ஏ.றிபாயிஸ் முகம்மட்டும் கணக்குப்பரிசோதகராக எம்.எச்.எம்.நஸாரும் நலன்புரி இணைப்புச் செயலாளர் ஆண் எம்.எம்.நௌபரும் நலன்புரி இணைப்புச் செயலாளர் பெண்.ஜிப்ரியா நௌபரும் பதிவாளர் பகுதி 1 க்கு ஏ.எச், இசட்.இம்தியாசும் பதிவாளர் பகுதி 2 க்கு எஸ்.கிஷோர் ஜகானும் நிதிப்பகுதிக்கு வீ.முகுந்தனும் முகாமைத்துவ பீடத்துக்கு யூ.கே.சுல்பிகாறும் கலைகலாசார பீடத்துக்கு எம்.ஏ.எம்.சிறாஜ்ஜும் அரபு பீடத்துக்கு ஏ.ஏ.சிஹானும் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு எம்.ரீ.எம்.ஹாஸிரும் சாரதி பிரிவுக்கு யூ.எல்.ஏ.அசீஸும் பிரதான நூலக பிரிவுக்கு எம்.இசட்.,எம்.நஜிமும் பாதுகாப்பு பிரிவுக்கு யூ.கே.எம்.ஹுசைனும் ஆய்வுகூட பிரிவுக்கு எம்.எஸ்.அகமெட்டும் களஞ்சிய பிரிவுக்கு எம்.எச்.எம்.ஹலிமும் நலன்புரி உடற்கல்வி பிரிவுக்கு எம்.எல்.நிசாரும் மற்றும் வெளிவாரி கற்கைப்பிரிவுக்கு எம்.சி.ரோசானும் தெரிவு செய்யப்பட்டனர்.