முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது
மு.கா க்கும், தலைவருக்கும் எதிராக செயற்படுகின்றவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட குழு அங்கீகாரம் வழங்குகின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட குழுக்களின் கல்முனை தொகுதி குழுக்கூட்டம் இன்று சாய்ந்தமருதில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீர் வளங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொரு வீட்டுக்கு வீடு மரம் என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை ஒன்றிணைத்து கட்சி கட்டமைப்பு பணிகளை எதிர்காலங்களில் எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது சம்பந்தமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இறுதியில் இக்கூட்டமானது போராளிகளின் உணர்வுகளின் வெளிப்பாடாக தலைப்பினையும் மீறி கட்சியும், தலைமையும் இப்போது எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாகவே விவாதிக்கப்பட்டது.
இறுதியில் இக்கூட்டத்தின் தீர்மானமாக தற்போது கட்சித்தலைமைக்கு எதிராக செயற்படுகின்றவர்களுக்கு எதிராக எதிர்காலங்களில் கட்சியின் தலைவர் ஹக்கீம் அவர்கள் என்னென்ன நடவடிக்கைகளினை எடுக்கின்றார்களோ அதற்கு முழு அங்கீகாரத்தினையும்இ அதிகாரத்தினையும் இக்குழு வழங்குகின்றது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கிழக்கு மாகான சபை உறுப்பினர்களான கே.எம்.அப்துல் ரசாக் (ஜவாத்), ஆரிப் சம்சுதீன், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சில் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.