பேராசிரியராக தெரிவு செய்யப்பட்ட றமீஸ் அப்துல்லாவுக்கு கி.மா.ச உறுப்பினர் மாஹிர் வாழ்த்து...!

எம்.எம்.ஜபீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 20 வருட வரலாற்றில் முதலாவது பேராசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த தமிழ்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக உயர் நிருவாகிகள் பங்கேற்ற நேர் முகப்பரீட்சையில் உயர்நிலை அடிப்படையில் முழுமையான முதல் பேராசிரியராக றமீஸ் அப்துல்லாஹ் தெரிவாகியுள்ளார். 10 வருடங்களுக்கு மேல் பேராசிரியராக சேவையாற்ற வாய்ப்புள்ளதால் வாழ்நாள் பேராசிரியராக மிளிரவாய்ப்புள்ளதை என் காதுகளில் கேட்டபோது எனது உள்ளம் சந்தோசத்தில் மிளிர்ந்தது என அவ்வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் மூன்றாவது தமிழத்துறைப் பேராசிரியராகவும், சம்மாந்துறை மண்ணின் முதவலாவது போரசிரியாராகவும் மிளிரும் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் உருவாக்கிய அந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதேவேளை மறைந்த தலைவர் பிறந்த சம்மாந்துறை மண்ணிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டமையிட்டு நானும் எமது சம்மாந்துறை மக்களும் பெருமிதம் அடைகின்றோம்.

இவ்வாறான பல்வேறு திறமைசாலிகள் இந்த தென்கிழக்கு மண்ணிலிருந்து உருவாக வேண்டும் என இறைவனிடம் பிரார்திப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -