கல்முனையில் நுளம்புகளை கட்டுப்படுத்துகின்ற ஆயுர்வேத திரவம் கண்டுபிடித்து சாதனை...!

எஸ்.அஷ்ரப்கான்-
நுளம்புகளை கட்டுப்படுத்துகின்ற திரவம், நுளம்புக் கொயில் போன்றவற்றுக்கு நிகரான தொழிற்பாட்டைக்கொண்டுள்ள முற்றிலும் 100 வீதம் ஆயுர்வேத மருந்தினால் தயாரிக்கப்பட்ட திரவக்கலவை ஒன்றை கல்முனை பிரதேச வர்த்தகரான எஸ்.எச்.முஹம்மது பௌஸ் என்பவர் தனிப்பட்ட முயற்சியினால் கண்டுபிடித்து சாதனைபுரிந்துள்ளார். 

இக்கண்டுபிடிப்பு தொடர்பாக அவரிடம் வினவினபோது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்,

இந்த ஆயுர்வேத இதனால் 100 வீதம் நுளம்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன எனது சிறிய வயது முதல் எனக்குவர்த்தகத்தில் பெரும் ஆர்வமுண்டு. அதன் காரணமாக தொடர்ந்தும் வர்த்தகத்துறையில் ஈடுபட்டுவருகிறேன். வர்த்தகத்துறையில் பெரும் ஆர்வம் கொண்ட நான், எனது சிறிய தந்தை ஆயுள்வேத வைத்தியர்மர்ஹூம் ஏ.எம். முஸ்தபா அவர்களிடமிருந்தே இந்த விடயத்தை கற்றுக் கொண்டேன். இது போன்று பலவிடயங்களை அவர் உயிருடன் இருந்த காலத்தில் என்னிடம் கூறியிருக்கின்றார். 

அவரிடம் இருந்து பெற்றதகவல்களை அடிப்படையாக வைத்து நான் இந்த திரவக் கலவையை கண்டுபிடித்துள்ளேன். மிக நீண்ட காலமாகஎனக்கு இந்த ஆசை இருந்து வந்தது. நுளம்புகளை கட்டுப்படுத்தும் பத்திகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும்திரவப் பொருட்கள் சகல மக்களுக்கும் போதிய பலனை வழங்குவதில்லை என்பது மக்களின் கருத்து. 

சிலருக்குஎவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆனால் பலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தி சுவாசத்திற்குபிரச்சினையாக அமைகிறது. என்ற நிலை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை அடிப்படையாக வைத்தேநான் மக்களின் நலன் கருதி ஒரு சமூக சேவை நோக்குடன்தான் இதனை உருவாக்க முயற்சித்து வெற்றிகண்டேன். ஆயுள்வேத மூலிகையால் இவ்வாறான நுளம்புகளை கட்டுப்படுத்தம் திரவத்தினை இதுவரை யாரும்கண்டுபிடிக்கவில்லை.

இதனை தயாரித்து சுமார் 3 மாத காலமாகிறது. அதற்கிடையில் எனது குடும்ப உறவினர்கள் மற்றும்அயலவர்களுக்கும் இதனை பரீட்சித்துப் பார்ப்பதற்காக சுமார் 20 வீடுகளுக்கு வழங்கினேன். அவர்களின்தகவல்களையும் பெற்றேன். இதுவரை எவரும் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் தெரிவிக்கவில்லை. முக்கியமாகசிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வாழும் வீடுகளுக்கும் கொடுத்துபரீட்சித்துப் பார்த்தேன். கற்பிணிப் பெண்களைப் பொறுத்தவரை சிறிய சுவாச மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு வாந்தி வரும் நிலை இருக்கும். ஆனால் அவ்வாறான எந்த பிரச்சினையும் கர்ப்பிணித்தாய்மாருக்கும் ஏற்படவில்லை. 

எல்லோரும் இதுவரை எவ்வித பிரச்சினையும், பக்கவிளைவுகளும் இதனால்இல்லை என்றே கூறுகின்றனர். அதுமட்டுமல்ல தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், டாக்டர்,பொது சுகாதார பரிசோதகர், என சுகாதார துறை சார்ந்த பல்வேறு தரப்பினரிடமும் இந்த கண்டுபிடிப்பைப் பற்றிதெரியப்படுத்தி அவர்களின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டுள்ளேன்.

இத்திரவம் நுளம்புகளை மாத்திரமல்ல கரப்பான் பூச்சி, பல்லி, ஈ போன்ற பலவற்றையும் கட்டுப்படுத்துகின்றவல்லமை கொண்டது. இதனை பரீட்சித்தவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

அரசாங்க ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இதர பொறுப்பு வாய்ந்தவர்களிடமும் பரீட்சித்த பின்னர் சான்றிதழ்பெற்று நான் இந்த சேவையை மக்களுக்கு வழங்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்.

நுளம்பு கொல்லி மருந்துகள் சிலருக்கு மட்டுமே பாவிக்க முடிகின்றது. சிறு பிள்ளைகளுக்கு கண்ணால்தண்ணீர் வடிதல், நாசடைத்தல் போன்ற பிரச்சினைகள் இந்த கம்பனிகளின் திரவ மருந்தினால் ஏற்படும் வாய்ப்புஉள்ளதாக மக்கள் தெரிவிக்கும் நிலையில், அது கெமிக்கல் என்பதால் அவ்வாறு ஏற்படலாம். ஆனால் எனதுகண்டுபிடிப்பான இத்திரவம் 100 வீதம் ஆயுள்வேத மூலிகைகளால் உருவானது. இதனால் எந்தவிதபக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.

இந்த திரவத்தினை தேசிய ரீதியில் சந்தைப்படுத்தும் எண்ணம் இருந்தாலும் அதற்கு பாரிய நிதி தேவைப்படும்.அதனை என்னால் ஈடு செய்ய முடியாது. அதற்காக தனியார் நிறுவனங்கள், அமைப்புக்கள் முன்வந்தால்நிச்சயமாக நான் தேசிய ரீதியாகவும் இந்த சேவையை வழங்க உத்தேசித்துள்ளேன்.

நான் இங்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நான் இந்த முயற்சியில் இறங்கியது எனக்குள்ளஆர்வத்தினாலும் மக்களுக்கு இந்த சேவை சென்றடைய வேண்டும் என்பதனாலும் மட்டுமே. மாறாக இதனைசந்தைப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு போட்டியாக அமைதல் என்ற விடயத்தில் எனக்கு உடன்பாடுஇல்லை. நான் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்குடன்தான் இருக்கின்றேன். மக்கள்தான்இதனை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஏனைய தயாரிப்புகளுக்கு நான் தடையாகஇருக்க மாட்டேன். மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -