அபு ஸெய்னப்-
தனது சுய பகையை தீர்த்துக்கொள்வதற்காக பொத்துவில் பிரதேச செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தில் உள்ளூர் அரசியல் வாதியொருவர் மூக்குடைந்து போன சம்பவம் ஒன்று பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பிரதேச செயலகத்தை தலைமையேற்று சிறந்த முறையில் வழிநடாத்தி மக்களுக்கு துரித கதியில் தனது சேவையைவழங்கிவரும் பிரதேச செயலாளர் முசர்ரத் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியிலேயே குறித்த அரசியல் வாதியும் அவரின் பிரதி அமைச்சரும் மூக்குடைந்து போயினர்.
பொத்துவில் தாரம்பலை விவசாய பிரதேசத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர், குறித்த பிரதி அமைச்சரின் பிரதேச விவசாயிகளுக்கு ஓராண்டு காலத்திற்கு விவசாய செய்கையினை மேற்கொள்வதற்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டன. அவ்வனுமதிப்பத்திரத்தின் படி குறித்த காணிகளை நிறந்தரமாக தனது விசாயிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சரால் பிரதசே செயலளாலர் பணிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது பிரதேச செயலாளர் தனது மறுப்பதை தெரிவித்துள்ளமையானது இடமாற்றதின் காரணிகளில் ஒன்றாகும்.
பிரதேச செயலாளரின் இடமாற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டதன் பின்னர், இவ்விசமச் செயலில் ஈடுபட்டவர்களால் பிரதான வீதியில் வெடிகள் வெடிக்கவைத்து தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டப்பட்டுள்ளமையானது அவர்களின் அனாகரீகத்தை வெளியுலகிற்கு காட்டுகின்றது.
இவ்விடமாற்றதை இறத்துச்செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முன்னால் பிரதேச சபை தவிசாளரும், மு.கா வின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களுக்கு பொதுமக்கள் தமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
மேலும், பிரதேச அரச அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுவதை தவிர்த்து, பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலத்திட்டங்களை தனது அமைச்சரின் ஊடாக முன்னெடுப்பதற்கான சகல முயற்கிகளையும் மேற்கொள்ளுமாறு மக்கள் அவ்வரசியல் வாதியிடம் வேண்டுகின்றனர்.