ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையொன்று ஜோர்தானிலுள்ள இர்பிட் என்னும் இடத்தில் நடைபெற்றது.
தலைநகரான அம்மானில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இர்பிட் நகரில் பல நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் அங்கு அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் அமைந்திருக்கும் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்றனர்.
இலங்கைத் தூதுவராலயத்தின் நடப்பாண்டின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான நடமாடும் சேவை செயற்பாடானது இலங்கைக்கான ஜோர்தான் நாட்டின் தூதுவர் அப்துல் லத்தீப் முஹம்மட் லபீர் அவர்களின் வழகாட்டுதலுக்கமைய இர்பிட் நகரில் அமைந்துள்ள 'கிளசிக் பஷன்' ஆடைத் தொழில்சாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'கிளசிக் பஷன்' ஆடைத்ததொழிற்சாலை எட்டு துணைத் தொழிற்சாலைகளினைக் கொண்டு இயங்குவதுடன் 1600க்கு மேற்பட்ட இலங்கைத் தொழலாளர்களையும் பணிக்கமர்த்தியுள்ள ஒரு பாரிய நிறுவனமாகும்.
கடவுச்சீட்டின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியனை நீடித்தல் புதிய கடவுச் சீட்டுக்கான விண்ணப்பங்களினை ஏற்றுக் கொள்ளல், இலங்கை குடிவரவு, குடியகல்வு திளைக்களத்தின் நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் முதலியன் இதன்போது வழங்கப்பட்ட சேவைகளில் சிலவாகும்.
தூதுவர் இச் சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், தொழிலாளர்களின் நேர விரயம், பணச் செலவு, சம்பளமற்ற விடுமுறை பெற்றுக் கொள்ளல் என்பவற்றினைத் தவிர்க்கும் பொருட்டும், இலங்கைத் தொழிலாளர்களுக்கு விரைவு சேவைளை வழங்கும் நோக்கிலும் இவ் நடமாடும் சேவையானது தூதுவரலாயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் தனதுரையில், இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்ற ஏனைய ஆடைத் தொழிற்சாலை கைத்தொழில் பேட்டைகளுக்கும் இச் சேவை விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தோழிற்சாலை ஆளணித்திணைக்களத்தின் தலைமை முகாமையாளர் இவ் நடமாடும் சேவை தொடர்பில் பேசும்போது, தூதுவரின் அனுபவத்தினாலும், அவரது ஒழுங்குபடுத்தப்பட்ட வழிகாட்டலினாலும் வழங்கப்படும் இச் சேவையானது தமது பணியாளர்களுக்கும், முகாமைத்துவத்திற்கும் நன்மையளித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கத்தின் குறிக்கோளையும் நிறைவேற்றியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நிறைவாக தூதுவர் தூதுவராலய உத்தியோகத்தர் அனைவரையும் வரவேற்றதுடன் தொழிற்சாலை முகாமைத்துவத்தின் சார்பாக தொழிலாளர்களுக்கு வழங்கிய சிறப்பான சேவைக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கைத் தூதுவராலயத்தின் பணிகளுடன் இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் வழமையான துரித ஒத்துழைப்பிலேயே இவ் நடமாடும் சேவையின் முழுமையான வெற்றியானது தங்கியுள்ளது.
இவ்வாறான நடமாடும் சேவை இலங்கை தூதுவராலய காரியாலயம் ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்து முதன் முறையாக இங்கு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-