மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காங்கேயேனோடை அல்-இக்றா பாலர் பாடசாலையின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் 2016.04.27ஆந்திகதி புதன்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் சிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
பாலர் பாடசாலையின் ஆசிரியர்களை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை காரணமாக காற்றின்றி மாணவர்கள் பெரும் அவதியுறுவதாகவும் பாடசாலையிலுள்ள இரண்டு மின்விசிறிகளும் செயலிழந்துள்ளதாகவும் பாடசாலை ஆசிரியைகள் சுட்டிக்காட்டினர்.
இதனை நிவர்த்தி செய்யும் முகமாக பழுதடைந்துள்ள மின்விசிறிகளை திருத்தியமைப்பதற்கு அல்லது புதிய மின்விசிறிகளை பொருத்துவதற்கு தனது சொந்த நிதியிலிருந்து சில தினங்களுக்குள் நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்தார்.
மேலும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மூன்று மாத கொடுப்பனவு தொகை 2016.04.28ஆந்திகதி வியாழக்கிழமை (இன்று) முதலமைச்சர் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள தேவநாயகம் மண்டபத்தில் வழங்கப்படவுள்ளதோடு தொடர்ச்சியாக மாதாந்தம் 3,000.00 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த கொடுப்பனவு தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு மிகவும் உறுதுனையாக இருந்து செயற்பட்டமைக்காக முன்பள்ளி ஆசிரியைகள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களுக்கு தங்களது நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்தனர்.