சம்மாந்துறை மண்ணின் மைந்தன் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் பிராந்தியத்துக்கு ஒரு மகுடம் - நாபீர்

எம்.வை.அமீர்-
ம்மாந்துறை பல்வேறு திறமையாளர்களை பிரசவித்துள்ளது. அந்த வரிசையில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் பேராசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, சம்மாந்துறைக்கு மட்டுமல்ல நமது பிராந்தியத்துக்கே பெருமை என்று நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும், நிர்மாண முகாமைத்துவ முதுமாணியும் சமூக சிந்தனையாளருமான, உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து, அதன் வரலாற்றில் முதலாவது பேராசிரியராக, அப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக திகழ்ந்த கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது மகிழ்ச்சியளிப்பதாகவும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழ்த்துறை பேராசிரியர்களாக காரைதீவைச் சேர்ந்த உலகின் முதல் தமிழத்துறைப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மற்றும் கலாநிதி எம்.எ.நுஹுமான் போன்றோரது வரிசையில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வும் இடம்பெற்று சம்மாந்துறைக்கும் பிராந்தியத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறந்த திறனாய்வாளரும் கவிஞருமான .47 வயதேயான பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், இப்பிராந்தியத்தில் கல்வி கற்போருக்கு ஒரு முன்மாதரியுமாக திகழ்வதாகவும் நாபீர் தெரிவித்தார்.

சம்மாந்துறை ஈன்ற பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களை வாழ்த்துவதாகவும், திறமையைத் தேடி கௌரவித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தை நன்றியுடன் பாராட்டுவதாகவும், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் இன்னும் முன்னேறி சமூகத்துக்கும், பிராந்தியத்துக்கும் பெருமை தேடித் தர பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -