இன­வாத அமைப்­புகள் நல்­லாட்­சி­கா­லத்­திலும் தலை­தூக்கத் தொடங்­கி­யுள்­ளமை கவலை தரும் விட­ய­மாகும்..!

கஜரூபன்-
ஹிந்த ஆட்­சியில் கொட்­ட­ம­டித்த கடும் போக்கு இன­வாத அமைப்­புகள் இன்­றைய நல்­லாட்­சி­கா­லத்­திலும் தலை­தூக்கத் தொடங்­கி­யுள்­ளமை கவலை தரும் விட­ய­மாகும்" என அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோக­நாதன் கூறினார். 

அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்­கத்தின் முகா­மைத்­துவ சபைக்­கூட்டம் கல்­முனை சணச மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்­திற்குத் தலைமை தாங்கி உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். "கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் உர மூட்டி வளர்க்­கப்­பட்ட கடும் போக்கு சிங்­கள இன­வாத அமைப்­புகள் இந்த நாட்டின் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு அச்­ச­மூட்டும் வகையில் கொட்­ட­ம­டித்து செயற்­பட்ட வர­லாற்றை எளிதில் மறந்து விட­மு­டி­யாது.

இத்­த­கைய அமைப்­பு­களின் கொட்­டங்­களை அடக்­கவும் மஹிந்­தவின் அரா­ஜக ஆட்­சியை ஒழிக்­க­வுமே ஆட்சி மாற்றம் ஒன்­றுக்­காக சிறு­பான்­மை­யின மக்கள் முழு மூச்­சுடன் செயற்­பட்­டனர். சிறு­பான்­மை­யின மக்­களின் ஒரு­மித்த ஆத­ரவு கார­ண­மாக ஆட்சி மாற்றம் ஒன்­றுக்கு வழி­கோ­லப்­பட்­ட­துடன் இன்­றைய நல்­லாட்­சியும் மலர்ந்­தது.

நல்­லாட்சி மலர்ந்து சகல இன மக்­களும் நிம்­மதிப் பெரு­மூச்­சு­விட்டுக் கொண்­டி­ருக்கும் இன்­றைய நிலையில் மீண்டும் இன­வாத கடும் போக்கு பௌத்த அமைப்­புகள் தலை­தூக்கத் தொடங்­கி­யுள்­ளன. நல்­லாட்­சியின் செயற்­பா­டு­க­ளுக்கும் நல்­லி­ணக்க முனைப்­பு­க­ளுக்கும் களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் இத்­த­கைய அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. 

சிறு­பான்மைச் சமூ­கங்­களை மீண்டும் அச்ச மூட்டி பேரி­ன­வாத அடக்­கு­மு­றை­க­ளுக்கு உள்­ளாக்கும் வகை­யி­லான சமிக்­ஞை­களை இந்த அமைப்­புகள் வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளன.

இத்­த­கைய விஷமச் செயற்­பாட்டின் ஓர் அங்­க­மா­கவே வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனைக் கைது செய்ய வேண்­டு­மெ­னவும் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தனை எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்­டு­மென்ற கருத்­துக்­களும் வெளி­வந்­துள்­ளன.

கடும் போக்கு இன­வாத அமைப்­பு­க­ளான பொது­ப­ல­சேனா, சிங்­க­ள­ரா­வய, ராவ­ணா­ப­லய எனும் அமைப்­புகள் இத்­த­கைய விஷக்­க­ருத்­துக்­களைக் கக்­கி­யுள்­ளன. நல்­லாட்­சி­யிலும் இத்­த­கைய கும்­பல்­களின் தலை­யெ­டுப்­புக்கள் சிறுபான்மை மக்கள் மத்­தியில் அதி­ருப்­தி­யையே ஏற்­ப­டுத்தும். எனவே நல்­லாட்சி அரசு மீண்டும் மஹிந்த யுக இன­வா­தக்­கொட்­டங்கள் மேலோங்க இட­ம­ளிக்­காது உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

இன்று முக்­கிய கால­கட்­டத்தில் நாம் இருந்­து­வ­ரு­கின்றோம். நல்­லாட்சி அரசு அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­தி­னூ­டாக புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வை வழங்கும் முனைப்­பி­லுள்­ளது. இது சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்குக் கிடைத்­துள்ள பெரும் வாய்ப்பு மட்­டு­மன்றி இறுதிச் சந்­தர்ப்­ப­மு­மாகும். 

எனவே நாம் இச்­சந்­தர்ப்­பத்தை மிகச் சாது­ரி­ய­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும். இதற்கு குறிப்­பாக தமிழ்– முஸ்லிம் மக்­க­ளி­டை­யே­யான புரிந்­து­ணர்வும் விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளு­ட­னான ஒற்­று­மையும் அவ­சி­ய­மாகும்.

இந்­நி­லையில் தமிழ், முஸ்லிம் மக்­களின் ஒற்­று­மையே அதி­காரப் பகிர்வின் முழு­மையைத் தரும் என்ற எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தனின் அறை­கூ­வலை நம் இரு சமூ­கங்­களும் முக்­கிய கவ­னத்திற் கொண்டு செயற்­பட வேண்டும்.தவி­ரவும் வடக்கு மாகாண சபையின் அமைச்­சு­க­ளுக்கு ஆலோ­ச­னைச்­ ச­பை­களை ஸ்தாபிக்கும் விடயம் உதா­சீனம் செய்­யப்­பட்டே வரு­கின்­றது. 

வடக்கு முத­ல­மைச்­ச­ருடன் எமது தொழிற்­சங்கம் நடத்­திய பேச்­சு­வார்த்­தையில் கூட இதனை நாம் வலி­யு­றுத்­தினோம். பொது நிரு­வாக அமைச்சின் செய­லாளர் கூட 10/2000 சுற்று நிரு­பத்தை அமுல்­ப­டுத்­து­மாறும் இது விடயத்தில் வலியுறுத்தியுள்ளார்" என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -