உலமா கட்சி உட்பட பல சிங்கள கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் எதிர் கட்சித்தலைவர் சம்ப்ந்தன் வீட்டின் முன்பாக மேற்கொண்ட சத்யக்கிரஹத்தை தொடர்ந்து தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி திரு. சம்பந்தன் மேற்படி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி மே மாதம் 3 ம்திகதி காலை இச்சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெறும்.
இதன்போது கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க கோரும் சம்பந்தனின் கோரிக்கைக்கான தமது எதிர்ப்பு சம்பந்தமான அறிக்கையை உலமா கட்சித்தலைவர் அவரிடம் கையளிக்கவுள்ளதாக முபாறக் மௌலவி தெரிவித்தார்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் ஜனாதிபதியுடனான சிறு கட்சித்தலைவர்களுடனான சந்திப்பு இன்று காலியில் நடைபெற்றது.
இதன் போது முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி, ஜனாதிபதியிடம் கையளித்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.