எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கும் தலைவலி வியர்வைக்கூரு, மற்றும் நோவு போன்ற நோய்களுக்குள்ளாகி வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, புல்மோட்டை, மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில் அதிக வெப்பம் நிலவி வருவதோடு நளாந்தம் பொது மக்கள் நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். கந்தளாய் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (18) ஆம் திகதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் அதிக வெப்பம் காரணமாக திடிர்ரென மூக்கினால் இரத்தம் வழிந்தோடியதோடு மயங்கியும் விழுந்ததாகவும் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக வெயில் காரணமாக கந்தளாய் தள வைத்தியசாலையின் நோயாளர்களின் வருகை பற்றி கந்தளாய் வைத்தியசாலை அத்தியட்சகர் பி.ஜி.கொஸ்தாவிடம் கேட்ட போது:
தற்போதைய வெயில் காலநிலை காரணமாக வருகின்ற நோயாளர்ககள் பெரும்பான்மையானோர் தலைவலி, களைப்பு மற்றும் பருக்கள் போன்ற நோய்களே ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
வெயிலுக்குள் குழந்தைகள் சிறுவர்கள் செல்லுவதை குறைத்துக்கொள்ளுமாறு அறிவித்துள்ளதோடு, சுத்தமான குடிநீரை பருகுமாறும் தெரிவித்தார். நாளாந்தம் நூறிற்கும் மேற்பட்ட நோயாளர்கள் வைத்தியசாலையை நாடுவதாகவும் ,பொது மக்கள் சித்தித்து செயற்படுமாறும் வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.