வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கையை சுவீடனின் வெளியுறவு அமைச்சர் நிராகரித்ததாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு சுவீடன் விசேட உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைதொடர்பிலேயே சுவீடன் அமைச்சர் தமது நிராகரிப்பை வெளியிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது மத்திய வருமானம் பெறும் நாடாக மாறியுள்ளது. இந்தநிலையில் விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று மார்கொட் வோல்ஸ்ரோம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முடிவை நாட்டின் உயர் தலைமைகளே மேற்கொள்ள முடியும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
மார்கொட், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போது விக்னேஸ்வரனை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.