இலங்கையில் ஐ.எஸ் ஆயுததாரிகள் - இலங்கை முஸ்லிம்கள் கண்காணிக்கப்படுவர்


லங்கையில் ஐ.எஸ் ஆயுததாரிகள் தலைதூக்குவதைத் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தீவிரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் மற்றும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்களின் குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளை கண்காணிக்கவுள்ளதாகவும் சாகல ரட்னாயக்க நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் ஆயுததாரிகள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், உள்நாட்டில் கடும்போக்கு கருத்துகள் வெளியாகும் இடங்கள், சொற்பொழிவுகள் ஆற்றுவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகில் இவ்வாறு செயற்படும் பல குழுக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நாடு இந்தக் குழுக்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், கல்வி அமைச்சு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், போன்றவற்றுடன் இணைந்து கடும்போக்குடைய சமய அமைப்புகள் ஊடாக இலங்கை முஸ்லிம்கள், கடும்போக்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்பூட்டல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையத்தளம் மற்றும் சமூக வலையமைப்புகள் ஊடாக கடும்போக்குடைய கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுப்பதோடு, பாதிப்புகளை ஏற்படுத்தும் வெளியீடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சாகல ரட்நாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -