புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தொடர்ந்தும் சிறந்த விதத்தில் செயற்படும் என புதிய பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபராக பூஜித் ஜயசுந்தர பதவியேற்றதன் பின்னர் கலந்துகொண்ட முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொலிஸ் என பொலிஸை இனிவரும் காலங்களில் அழைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“செய்வேன் முடியாவிட்டால் செல்வேன்” – பூஜித் ஜயசுந்தர
இந்தபதவியை செய்வேன் முடியாவிட்டால் செல்வேன் என இலங்கையின் 34 வது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள புஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர் கலந்துகொள்ளும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது. இந்த பதவியானது எனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடம் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்க விடயம் பற்றி குறிப்பிட்ட பொலிஸ்மா அதிபர், அதுவிடயம் தொடர்பாக தான் கண்டிப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.