சிரியாவின் இரண்டு பிரதேசங்களில் பகுதி அளவில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது.
பெரும்பாலும் பல பகுதிகளில் அமைதி நிலவுவதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்தப் போர் நிறுத்தத்தை முன்னெடுப்பதாக சிரியாவின் இராணுவம் உறுதியளித்திருந்தது.
எனினும் லட்டாக்கியா மாகாணத்தில் பொதுவாக அமைதி நிலவினாலும், ஆங்காங்கே சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார்.
ஆனாலும் நேற்று-வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த மோதல் நிறுத்தம் குறித்த இந்த உடன்படிக்கை, பிளவுபட்டிருக்கு அலெப்போ நகரை தவர்ந்த இடங்களில் மட்டுமே அனுசரிக்கப்படுகிறது.
அங்கு கடந்த சில நாட்களில் மட்டும் 200க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதல் நிறுத்த உடன்படிக்கையில், அலெப்போ நகரையும் உள்வாங்க, சிரிய அரசின் முக்கிய கூட்டாளியான ரஷ்யா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நகரின் மீதான தாக்குதலை முன்னெடுக்க சிரியாவின் இராணுவம் தயாரகி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.