க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைதொகுதியும் பஸ் தரிப்பு நிலையத்தையும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக அவர்களினால் 10.04.2016 திறந்து வைக்கப்பட்டது.
அம்பகமுவ பிரதேச சபையின் 44 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பிரதான பஸ் தரிப்பிடத்துடன் 21 கடை தொகுதிகளையும் கொண்ட புதிய கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்கு 10.04.2016 அன்று சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண இந்து கலாசார தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சோ.ஸ்ரீதரன், எம்.ராம், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஸ் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளர் எஸ். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.