புர்காவுக்கு தடை: மீறுபவர்கள் மீது அபராதம் - நகர மேயர் எச்சரிக்கை

த்திய பல்கேரிய நகரான பஸர்ட்சிக்கில் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதற்கு உள்ளூர் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. சமூகங்களுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கான் நாடொன்றில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல்முறை என்பதோடு சுமார் 70,000 மக்கள் வசிக்கும் இந்த நகரில் ரோமா சிறுபான்மை முஸ்லிம் பெண்களிடையே முகத்தை மறைக்கும் புர்கா அணிவது வழமையானதாகும்.

7.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பல்கேரியாவில் முஸ்லிம்கள் 12 வீதமாக இருப்பதோடு பெரும்பாலானவர்கள் நூற்றாண்டு காலமாக அங்கு வாழும் துருக் இனத்தவர்களாவர். எனினும் முகத்தை மூடும் வழக்கம் இவர்களிடையே குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ரோமா சிறுபான்மை முஸ்லிம்களிடம் அண்மைக் காலமாக புர்கா அணியும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளமை அந்நாட்டு தேசியவாதிகளின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. பல்கேரிய அரசுக்கு ஆதரவளிக்கு தேசியவாத கட்சி தேசிய அளவில் முகத்தை மூடுவதற்கு தடைவிதிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. 

இந்த தடையை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று நகர மேயர் டோடோர் பபவ் எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -