முகம்மது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை பிரசுரித்த பத்திரிக்கையாளர்களுக்கு சிறைத் தண்டனை..!

சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையில் வெளியான, முகம்மது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை தங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்த 2 பத்திரிக்கையாளர்களுக்கு துருக்கிய நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

Cumhuriyet daily என்ற துருக்கிய பத்திரிக்கையில் கட்டுரையாளர்களாக பணிபுரிந்து வரும், Ceyda Karan and Hikmet Cetinkaya இருவரும் கடந்த வருடம் எழுதிய கட்டுரை ஒன்றில், பிரான்ஸின் ’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையில் வெளியான, முகம்மது பற்றிய கேலிச் சித்திரத்தை மறு பிரசுரம் செய்துள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, துருக்கி பொலிசார் அந்த பத்திரிக்கையின் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த பிரதிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் போராட்டக்காரர்கள் பலர் அந்த கேலிச் சித்திரத்தை பிரசுரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த பத்திரிக்கை பிரதிகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

பத்திரிக்கை வழியாக மக்கள் மத்தியில் வெறுப்பையும் பகையும் வளர்ப்பதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் தனித்தனியே 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அந்த பத்திரிக்கையாளர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -