கருத்தொன்றைக் கூறிவிட்டு பத்திரிகைகளை பார்க்கும் வரை பயமாக உள்ளது - ஊடக அமைச்சர்

தான் கருத்தொன்றைக் கூறும்போது, அடுத்து வௌிவரும் பத்திரிகைகளை பார்க்கும் வரை பயம் ஏற்படுவதாக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

சிலவேளை தான் கூறியவற்றுக்கு மாறாக பிறிதொரு கதையே பத்திரிகைகளில் வௌிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தெரண ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள "தெலி பிகியென் கிரி கேம - 02 நவீன ஊடகவியலாளர்களுக்கான சவால்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சி நிலையங்களை நிறுவவேண்டியது அவசியம் என இங்கு கருத்துரைத்துள்ள அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதற்காக சீன அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதற்காக அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பிரதமர் அடுத்ததாக சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும், இதன்போது இந்த விடயம் குறித்தும் அவதானம் செலுத்துமாறு தான் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -