பொத்துவில் அஸீஸ் வித்தியாலயத்திற்குப் பூட்டு - நான் வெட்கப்படுகிறேன் : வாஸித்

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

பொத்துவில் சர்வோதய புர ஆத்திமுனைக் கிராமத்தில் அமைந்துள்ள கவிவாணர் .எம்.ஏ.அஸீஸ் வித்தியாலயத்திற்கு பூட்டுப் போடப்பட்ட நிலையில் இன்று பெற்றோர், மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மேற்படி பாடசாலையில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையால் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதாகவும், இது குறித்து கல்வியதிகாரிகள் பாரா முகமாக நடந்து கொள்வதாகவும், இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வரை தாம், தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல், பாடசாலைக் கேற்றைப்பூட்டி ஆர்ப்பாட்டத்திலும், அதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

'கல்வி அதிகாரிகளே உங்கள் கண்கள் இன்னுமா திறக்கவில்லை?, எங்கள் பரிதாபம் பாரீர்! எமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுங்கள், ஏன்? நாங்களும் ஒரு அப்துல் கலாமாக வரமுடியாதா? இலங்கையிலும் ஒரு அப்துல் கலாம் வருவதைத் தடுக்காதீர்கள்' போன்ற வாசங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கவிவாணர் எம்.ஏ.அஸீஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.முகம்மட் சமீம் கருத்துத் தெரிவிக்கையில் ' இப்பாடசாலையில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் கடந்த வருடம் இரு ஆசிரியர்கள் தற்காலிமாகத் தரப்பட்டனர். பின்னர் அவர்களும் உரிய நிரந்தர இடங்களுக்குச் சென்று விட்டனர். 

அதன் பிற்பாடு நிலைமையைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் ஆசிரியர்களைத் தருவதாகக் கூறியுள்ளனர். அதற்கிடையில் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தள்ளனர்'எனத் தெரிவித்தார்.

இது குறித்து பொத்துவில் உபவலயக் கல்விப்பணிப்பாளர் எம்.பி.ஏ.வஹாப்பைத் தொடர்பு கொண்டோம்.( தொ.பேசி. 0711111811) கருத்துப் பெறமுடியவில்லை.

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது ' இப்பிரச்சினை கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம். 

பொது மக்களும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்களையும் தமது எதிர்ப்பையும் காட்டி வருகின்றனர். கல்வி அதிகாரி ஏனைய பாடசாலைகளிலிருந்து கடனுக்காவது ஆசிரியர்களைப் பெற்றுத் தருவதாக என்னிடம் இன்று தொலைபேசியில் தெரிவித்தார். 

நான் வெட்கப்படுகிறேன். ஏமக்கு ஒரு அரசியல் அதிகாரம் இல்லாததனால்தான் இந்நிலை உருவாகியுள்ளது என எண்ணுகிறேன். கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் ஒரு மாகாணக் கல்வியதிகாரியாக இருந்தவர். இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பார் என நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -