தெஹிவளையில் அதிசொகுசு வீடுகள் - மீண்டும் சிக்களில் யோசித்த

தெஹிவளையில் உள்ள அதிசொகுசு வீடுகள் இரண்டும் யோசிதவுக்கு சொந்தமானது என பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வருமான யோசிதவினால் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் 65 பேர்ச்சர்ஸ் நிலம் கொள்வனவு செய்யப்பட்டு, பல கோடிகள் பெறுமதியான சொகுசு வீடுகள் இரண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கால்டன் நெட்வேர்க் நிறுவனமான (C.S.N) நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 65 பேர்ச்சர்ஸ் இடமானது பகுதிபகுதிகளாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெஹிவளை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 5 பேர்ச்சர்ஸ் இடமும் சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலையில் இவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு பகுதிபகுதிகளாக கொள்வனவு செய்யப்பட்ட இடத்தில் 35 பேர்ச்சர்ஸ் யோசிதவின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி இடம் திருமணமாகாத 88 வயதான பெண் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சொகுசு மாடி வீடுகள் இரண்டிலும் மின் உயர்த்தி (Lift) வசதிகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 828/16 இலக்கத்தின் கீழ் இந்த விடயம் தொடர்பாக கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -