அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது கிளைக்குளுவின் ஒன்றுகூடல்...!

எம்.வை.அமீர்-
ரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக அண்மையில் சாய்ந்தமருதில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் கிளைகள் அமைக்கப்பட்டு ஏ.எல்.எம் அன்வரை அமைப்பாளராக கொண்டு மத்திய குழுவும் அமைக்கப்பட்டது.
அமைக்கப்பட்ட சாய்ந்தமருது கிளை நிருவாக சபை உறுப்பினர்களுக்கிடையிலான ஒன்றுகூடல் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் மாட்டுப்பள தெண்னந்தோப்பில் 2016-04-24 ஆம் திகதி இடம்பெற்றது. 

இதில்17 கிளைகளிருந்தும் 10 நிருவாக சபை உறுப்பினர் வீதம் 170 உறுப்பினர்களும் மேலும் ஊர் பிரமுகர்களுமாக மொத்தமாக 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் இங்கு கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் ஏ.எல்.ஜஹான் (இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின், மக்கள் தொடர்புஅதிகாரி) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -