கோத்தபாய அமெரிக்காவில் கைது...?

கோத்தபாயவை கைதுசெய்யக் கூறி அமெரிக்காவின் இரண்டு பிரதான அமைப்புகள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. tamils for obama மற்றும் american tamil forum ஆகிய அமைப்புகளே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் பல மீறப்பட்டுள்ளதாகவும், பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை ஆகிய யுத்த குற்ற மீறல்களுக்கு பொறுப்பானவர் கோத்தபாய ராஜபக்ஸ என்றும் இவர் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதிக்கும் நெருக்கமானவர் என்றும் குறித்த அமைப்புக்களின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுமக்களுக்கு எதிராக மேற்கொண்ட யுத்த குற்ற நடவடிக்கைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் என குறித்த தமிழ் அமைப்புக்கள் பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான யுத்த குற்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நபர் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் வரும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் எனவும் குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -