கூட்டு எதிர்க்கட்சி எனும் பதம் சட்டத்திற்கு முரணானது எனவும், எதிர்க்கட்சி என்ற பதத்தினை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது என்றும் பராளுமன்ற மறுசீரமமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியளாலர்களுக்கும் அறிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி எனும் பதம் சட்டத்திற்கு முரணானது, எதிர்கட்சி என்று குறிப்பிட்டு அதனை பிரபல்யப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் சட்டத்திற்கு முரணான வியடம் என அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பயன்படுத்துவதால் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சட்டத்தின் முன் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியன குறித்து தெளிவாக பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பின்புலத்தில் எதிர்கட்சி தலைவர் அல்லது எதிர்கட்சியின் பிரதம கொறடா ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தாத, ஆளுங்கட்சிளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சியை நோக்காக கொண்டு ஆட்சி பீடம் ஏறியுள்ள தற்போதைய அரசாங்கம் ஊடக கொள்கைகளுக்கு அமைய எவ்வித தடைகளுமின்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியுள்ள நிலையில் , ஊடக கலாசாரம் ஊடக தர்மத்திற்கு முரணாக தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.