கல்முனையில் விளையாட்டுக்கழகங்களின் சம்மேளனம் அமைக்க நடவடிக்கை!





ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-

ல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்களின் தேவைப்பாடுகளை கேட்டறியும்கலந்துரையாடல் நேற்றிரவு கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார் உள்ளிட்டகல்முனை பிரதேச விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய மைதானமாகவிரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் அபிவிருத்தி பணிகள்ஆரம்பிக்கப்பட்டதும் வீரர்கள் விளையாடுவதற்கு மாற்று மைதானம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

விளையாட்டுக்கழகங்களில் விசேட திறமை காட்டும் வீரர்களுக்கு மேலதிக பயிற்சிகளைகொழும்பு மற்றும் இதர பிரதேசங்களில் சர்வதேச தர பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கநடவடிக்கை எடுத்து வருகின்றேன். அத்தோடு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்வழங்குவதற்கான நடவடிக்கைகள் அமைச்சு மட்டத்தில் நடைபெற்று வருகின்றது. அவ்உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

இதன்போது விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் கல்முனை பிரதேச கழகங்களைஉள்ளடக்கிய சம்மேளனம் ஒன்றினை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் உடற்கல்விவிரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டுஅதிகாரி எம்.ஏ.நபார் ஆகியோரை உள்வாங்கி சகல கழகங்களின் பிரதிநிதிகளையும்உள்ளடக்கிய சம்மேளனத்தினை அமைத்துக் கொள்ளுமாறு பிரதி அமைச்சர் ஹரீஸ்ஆலோசனை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -