அய்ஷத் ஸெய்னி-
எஸ்எச்எம்.ஜெமீல் என்ற ஆளுமை நம்மை விட்டுப் பிரிந்து 2016.04.28 உடன் ஓர்ஆண்டு பூர்த்தியாகி விட்டது. பன்னூலாசிரியராக மிளிர்ந்ததோடு மாத்திரமல்லாமல் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியீடு செய்வதிலும் ஆர்வம் காட்டியவர் அவர்.
இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்து நற்பணியாற்றியவர் அவர்.
மருதூர்க் கொத்தன் கதைகள்.
அவளுக்கும் ஓர் இதயம் (ஜுனைதா ஷெரீப்)
எழுவான் கதிர்கள் (கிழக்கு கவிஞர்களின் தொகுப்பு)
என்பவற்றோடு ஏஎச்எம். பசீர் அவர்களின் சிறுகதைத் தொகுதியையும் வெளியீட்டுப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ஞாபகம் இருக்கிறது.
எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதிலும் தேசிய விருதுகளுக்காகப் பரிந்துரை செய்வதிலும் அவர் தொடர்ந்து பங்களிப்புச் செய்து வந்தார்.
அவருடைய இறுதி மூச்சுவரை எழுத்தாளர்களையும் ஆக்கங்களையும் அடையாளப்படுத்துவதில் கரிசனை காட்டினார்.
சுவடி ஆற்றுப்படை - 5ஐ வெளியிடுவதில் அக்கறையோடு செயல்பட்டார். ஆயினும் அவருடைய பிரிவினால் அந்த நூலின் வரவு தடைப்பட்டிருந்தது.
இப்பொழுது 30-04-2016ல் அந்நூல் வெளிவர இருப்பதாகக் கிடைத்த தகவல் மகிழ்ச்சியைத் தருகிறது. வெளியீட்டாளர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
ஜெமீல் சேரின் நல்லமல்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.