ஹைதர் அலி -
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பிறைந்துறைச்சேனையில் அமைந்துள்ள நூரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு மின்சாரம் தடைப்படும் நேரங்களில் பயன்படுத்துவதற்காக ஜெனரேட்டர் (மின் பிறப்பாக்கி) இல்லாமையினால் இப்பள்ளிவாசல் நிருவாக சபையினர் மிகவும் சிரமங்களையும், அசௌகரியங்களையும் எதிர் நோக்கி வந்தனர்.
இக்குறையினை நிவர்த்தி செய்துதருமாறு பிறைந்துறைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாக சபையினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு இக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர். அவ்விடயத்தினை கவனத்திற்கொண்ட மாகாண சபை உறுப்பினர் தனது 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதிக்கீட்டிலிருந்து பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.
தான் வாசிக்கும் பிரதேச மக்களின் தேவைகளை மாத்திரம் கண்டறிந்து சேவை செய்யாது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள முழுப்பிரதேசங்களுக்கும் தன்னாலான அபிவிருத்தி பணிகளையும், வாழ்வாதார உதவிகளையும் மேற்கொண்டு வரும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக தனது 2015ஆம் ஆண்டின் நிதியொதிக்கீட்டிலிருந்து பிறைந்துறைச்சேனை நூரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு ஜெனரேட்டர் (மின் பிறப்பாக்கி) ஒன்றினை பெற்றுக்கொடுத்தார்.
இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பிறைந்துறைச்சேனை நூறிய்யா ஜூம்ஆ பள்ளிவாசலில் 2016.03.30ஆந்திகதி புதன்கிழமை நடைபெற்றது. இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்கள், இப்பிரதேசத்தில் வசிக்கும் உலமாக்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.