திருகோணமலை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில் படுகாயமடைந்த ஆறு பேர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருகோணமலை -புத்தளம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிலொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில், அம்மோட்டார் சைக்கிளில் பயணித்த மொறவெவ பத்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த மானவடுகே தர்மதாச (வயது 72) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறிருக்க, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவெல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மாட்டுடன் மோதியதில், தந்தையான என்.திஸாநாயக்க (வயது 42) மற்றும் மகனான டி.சுரங்க (வயது 12வயது) படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், கிண்ணியாப் பிரதேசத்தில் சைக்கிளும் மோட்டார் சைக்கிளும்; மோதியதில், குறிஞ்சாக்;கேணியைச் சேர்ந்த எம்.சதாம் (வயது 26) மற்றும் அன்வர் அலி (வயது 27) படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலை -கண்டி வீதியில் ஐந்தாம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த டி.காவிந்தி (வயது 12) படுகாயமடைந்துள்ளார். தாயும் மகளும் வீதியோரமாகச் சென்று கொண்டிருந்தபோது, மகள் மீது முச்சக்கரவண்டி மோதியது.
இதனைத் தொடர்ந்து அம்முச்சக்கரவண்டி மீது வானொன்று மோதியது.
இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியையும் வான் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியையும் வான் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.