த.நவோஜ்-
இளைஞர் யுவதிகளிடம் கல்விசார் தகமை மட்டுமல்லாது உள்நாட்டு வெளிநாட்டு அங்கீகாரம் பெற்ற தொழில்சார் தகமை இருந்தால் மாத்திரமே இலங்கையிலோ அல்லது வெளி நாட்டிலோ தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி, சர்வதேச தொழில் நிறுவகம் மற்றும் தேசிய தொழில் பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை என்பன இணைந்து நடாத்திய தேசிய மட்டத்தில் தொழில் தகமைப் பயிற்சியை முடித்துக் கொண்ட 116 இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
முன்பு கற்ற கல்விய கருத்தில் கொள்ளும் முறையினூடாக இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தகமைச் சான்றிதழை வழங்கி வைத்து அவர் மேலும் கூறுகையில்!
எமது சுற்றுச் சூழலில் தொழில் வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாய் இருப்பதனால் தொழில்சார் கல்வியை உடையவர்கள் மாத்திரம் போட்டியின்றி இலகுவில் தொழில் வாய்ப்பபை பெறும் நிலை காணப்படுகின்றன. மாணவர்கள் பல்கலைக் கழகக் கல்வியில் காட்டம் ஆர்வம் தொழில் சார் தகமையை வழங்கும் நிலையங்களில் கல்வி கற்க முனவருவது குறைவாகக் காணப்படுகின்றது.
இளைஞர்கள் உள்நாட்டு வெளிநாட்டு அங்கீகாரம் பெற்ற தொழில் தகமைச் சான்றிதழ்களை வழங்கும் நிலையங்களில் மாத்திரமே பயிற்சியைப் பெற வேண்டுமே தவிர மாறாக தொழில்வாண்மையற்ற நிலையங்களினால் வழங்கப்படம் சான்றிதழ்களால் எதுவத நன்மையுமில்லை. தொழில் பெறுவதில் பொட்டிமிக்க இக்காலத்தில் இளைஞர்கள் கணனி மற்றும் ஆங்கிலப் புலமையின் மூலம் மிகவும் இலகுவாக உங்களது கனவை நனவாக்கலாம் என்றார்.
இந்நிகழ்வில் தொழில் பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் உதவித் தலைவர் கலாநிதி ஏ.யு.சி. அத்துக்கொரல்ல, மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்சழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, சர்வதேச தொழில் நிறுவகத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் ஆர். சிவப்பிரகாசம் அகியோர் கலந்து கொண்டனர்.