இன்று சர்ச்சைக்கு உள்ளாகி வரும் முஸ்லீம் பெண்கள் திருமண வயதெல்லை விடயத்தில் அரசியல் அமைப்பு சீர்திருத்த விடயங்களில் தனியார் சட்டங்களில் எங்களுடைய சமய அடிப்படையில் அணைத்தையும் எமது சமூகமே தீர்மானிக்க வேண்டும் வேறு யாருமே கையாடல் செய்ய முடியாது.இது எமக்கான உரிமையாகும்.
இவ்வாறு இன்று தெஹிவளையில் இடம் பெற்ற சமுக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் நிருவாக தெரிவு நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே அதன் தலைவி திருமதி ரோஹினா மஃறூப் குறிப்பிட்டார். நல்லாட்சிக்கான அரசை உருவாக்கி அதில் மிகுந்த நம்பிக்கையோடு முஸ்லீம் சமுகம் வாழ்கின்றது.
எமது அடிப்படையான மத உரிமைகள் கடந்த ஆட்சியில் மறுக்கப்பட்ட போதுதான் நாம் நல்லாட்சியை வேண்டி நின்றோம். எமது மத ரீதியான திருத்தங்களோ மாற்றமோ எம்மிலிருந்து எமது மார்க்க நெறிமுறைக்குட்பட்டதாக வர வேண்டுமே தவிர வேறு யாரும் கையாட முடியாது.இதன் போது பல் வேறுபட்ட சமுக பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அனுபவிக்கும் துயர் மிகு வாழ்வை உணர்ந்தவள் அதன் வடுக்களையும் அர்கள் வாழ்வையும் மனதிலே சுமந்திருக்கிறேன்.
எனது பணியும் எனது நோக்கமும் அவர்களது வாழ்வை மறுமலர்ச்சி அடையச் செய்வதாகும். அதன் மிகப் பெரிய பொறுப்பை தடைகள் தாண்டி ஏற்று இருக்கிறேன். எமது அமைப்பது எதிர்காலத்தில் பல வியுகம் அமைத்து செயற்படப்போவது உறுதி.என்றார்.