கல்வி அமைச்சரிடம் பல கேள்விகள் - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-
பொத்துவில் உப-வலயப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக குறைகள் தொடர்பாக எதிர்வரும் 2016.04.26 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபானி அவர்களிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் பல கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, பொத்துவில் உப கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நீண்ட நாட்களாக நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை கிழக்கு மாகாண கௌரவ கல்வி அமைச்சர் அறிவாரா? பொத்துவில் உப கல்வி வலயப் பாடசாலைகளில் பற்றாக் குறையாக உள்ள ஆசிரியர்களின் விபரங்களை கிழக்கு மாகாண சபையில் கௌரவ கல்வி அமைச்சர் தெரிவிப்பாரா? 

கல்முனை, அக்கரைப்பற்று கல்வி வலயங்களைச் சேர்ந்த 19 ஆசிரியர்கள் பொத்துவில் உப கல்வி வலயப் பாடசாலைகளில் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் சேவையினை முடித்து பழைய பாடசாலைகளில் தங்களின் பதவிகளை ஏற்றுள்ளார்கள் என்பதனை கௌரவ கல்வி அமைச்சர் அறிவாரா? 

பொத்துவில் உப கல்வி வலயத்திலிருந்து 02 வருட கால ஒப்பந்த அடிப்படையிலான தங்களின் சேவையினை முடித்துவிட்டு தங்களின் பழைய பாடசாலைகளில் பதவிகளை ஏற்றுள்ள 19 ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியர்களையும், பொத்துவில் உப கல்வி வலயத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர்கள் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு கௌரவ கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை கிழக்கு மாகாண சபையில் தெரிவிப்பாரா? போன்ற விபரங்களே கேட்கப்படவுள்ளது.

இதே வேளை பொத்துவில் பிரதேசத்தில் பின்தங்கிய பிரதேசமான ஆத்திமுனை கிராமத்திலுள்ள கவிவாணன் எம்.ஏ.அஸீஸ் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக் குறையை தீர்க்கக் கோரி மாணவர்களின் பெற்றோர்கள், பொது அமைப்புக்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு இணைந்து பாடசாலையின் நுழைவாயில் கதவுகளை பூட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இப்பாடசாலையினுடைய கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -