உதுமாலெப்பை MPC சமர்ப்பித்த பிரேரணையை கிழக்கு மாகாண சபை ஏற்றுக் கொண்டது..!

சலீம் றமீஸ்-
கில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ஒன்றை ஸ்தாபித்து ஆசிரிய ஆலோசகர்களை உள்ளீர்ப்பு செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரிடமும் கிழக்கு மாகாண சபை கோரிக்கை!

அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ஒன்றை ஸ்தாபித்து கல்வி வலயங்களில் சேவையாற்றும் ஆசிரிய ஆலோசகர்களை உள்ளீர்ப்பு செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரிடமும் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் மேற்படி பிரேரணை கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட போது அதனை ஏகமானாதாக கிழக்கு மாகாண சபை ஏற்றுக் கொண்டு இதனை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 

கிழக்கு மாகாண சபையின் அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்ததாவது, 1962 ம் ஆண்டு போட்டி பரீட்சை, நேர்முக பரீட்சைகள் ஊடாக ஆட்சேர்ப்பின் கீழ் உருவாக்கப்பட்ட ஆசிரியர் ஆலோசகர் சேவையானது காலத்தோடு இணைந்து வியாபித்துள்ள ஒரு சேவையாகும். நமது பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளில் அத்தியவசிய துறையாக இத்துறை காணப்படுகிறது. 

கடந்த 18 வருட காலமாக ஆசிரிய ஆலோசகர்களின் கோரிக்கைகள், மற்றும் தொழில் சார் போராட்டங்களின் பிரதி பலனாக மத்திய அரசாங்க கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட 04 ஆணைக்குழுக்களில் 03 ஆணைக்குழுக்கள் இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை உருவாக்க வேண்டும் எனவும் 01 ஆணைக்குழு இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் சிபாரிசு செய்துள்ளது.

இதற்கமைவாக இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை ஏற்படுத்த வேண்டும் என 2014 ம் ஆண்டு ஜுன் மாதத்தில் மத்திய அரசாங்க கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக இச்சேவையை ஏற்படுத்துவதற்கு சம்பள திட்டத்தினை தயாரித்து 2015 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சம்பள ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்ற போதும் இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையை ஏற்படுத்துவதற்கு இதுவரை மத்திய அரசாங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் கடந்த பல மாதங்களாக அகில இலங்கை ஆசிரிய ஆலோசகளினது ஒன்றினைந்த சங்கம் சட்டப்படியான வேலை செய்யும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

எனவே, நீண்ட காலமாக அர்ப்பணிப்போடு வலயக்கல்வி அலுவலயங்களில் சேவையாற்றி நமது கல்விச் செயற்பாடுகளில் பெரும் பங்களிப்புகளை வழங்கி வரும் ஆசிரிய ஆலோசகர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையை உருவாக்கி உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதம மந்திரி, மத்திய அரசாங்க கௌரவ கல்வி அமைச்சர் ஆகியோர்களிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடவேண்டும் என கிழக்கு மாகாண சபையில் கேட்டுக் கொண்டதற்கமைவாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -