திருகோணமலை பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்து வைத்தார் லாஹிர் MPC

எப்.முபாரக்-
ம்பலகாமம் பிரதேசத்திற்க்குட்பட்ட சிராஜ் நகர் கனிஷ்ட பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக் குறைகளை நிவர்த்திக்கக் கோரி பாடசாலையின் அபிவிருத்திக் குழுவினரும், பெற்றோர்களும் கடந்த வியாழக்கிழமை (31) போராட்டத்தில் ஈடுடபட்டனர். இதுதொடர்பில் கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழுவினரையும், பெற்றோர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்விப் பாதிப்பு பாடசாலையிலுள்ள வளப்பபற்றாக்குறை தொடர்பாகவும் முன்வைக்கப்பட்டு இவ்வாறான குறைபாட்டை நிவர்த்தி செய்து தருமாறு பாடசாலை அபிவிருத்திக்குழுவினரால் மாகாண சபை உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியாக மாகாண கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் தலைமையில் குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழுவினர் கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளர், கோட்ட கல்விப் பணிப்பாளர் மற்றும் பெற்றோர்கள் கொண்ட குழுவினர் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிசாமை வெள்ளிக்கிழமை (1) மாகாண கல்வி பணிமனையில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதுதொர்பில் கருத்திற்கொண்ட மாகாண கல்விப் பணிப்பாளர் இரண்டு ஆசிரியர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதாகவும் மேலும் இரண்டு ஆசிரியர்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்(4) நியமிப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -