NFGG மகளிர் அணி நடாத்திய மகளிர் தின நிகழ்வும் துறை சார் முதன்மையாளர்கள் கௌரவிப்பும்..!

ஹைதர் அலி-
ல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் கிழக்குப்பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்தமகளிர்தின நிகழ்வும் மற்றும் துறைசார் முதன்மையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் 2016.04.03ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

'தடைகளைத்தாண்டி...' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்புமாவட்ட அரசாங்க அதிபர் திருமதி PSM. சார்ள்ஸ் மற்றும் கௌரவ அதிதிகளாக 

தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, மட்டக்களப்பு மத்தி வலயகக்ல்வி அலுவலகத்தின் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி SA. நசீரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வின் விஷேட அதிதிகளாக கலந்து கொண்ட கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் DR. ILM. ரிபாஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான்ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினார். 

அத்தோடு NFGGயின் பிராந்திய சபை சிரேஷ்ட உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச பிரமுகர்கள்,முன்பள்ளி ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின் பிரதான அம்சமாககாத்தான்குடி பிரதேசத்தின் தேர்வு செய்யப்பட்ட துறைகளில் முதன்மையாளர்களாக சாதித்த 20 பெண்களைகௌரவிக்கின்ற நிகழ்வு இடம்பெற்றது. 

இக்கௌரவிப்பு நிகழ்வில் பின்வரும் சகோதரிகள் குறிப்பிட்ட துறைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

01. முதல் பெண் ஆசிரியை (1961) - ஹாஜியானி பக்கீர் பாத்தும்மா கபூர்.

02. முதல் மௌலவியாக்கள்(1971) - திருமதி. ஹைறுன்னிசா கையூம்

03. முதல் மௌலவியாக்கள்(1971) - திருமதி. சித்தி கதீஜா நூர் முஹம்மட்

04. முதல் பெண் எழுத்தாளர்(1972) - காத்தான்குடி பாத்திமா

05. முதல் பெண் அதிபர் (1978) - திருமதி. PMU. ஸாஹிப் BA.

06. முதல் முன்பள்ளி ஆசிரியை( 1978) - திருமதி லத்தீபா ஆதம் லெப்பை

07. முதல்குடும்ப சுகாதார உத்தியோகத்தர் (1980) - திருமதி சித்தி நயீமா செய்னுல் ஆப்தீன்.

08. முதல் பெண் பட்டதாரி.( 1981) - ஹாஜிமா. ஜெஸீமா ஆதம் லெப்பை.BSc

09. முதல் பெண் வர்த்தக பட்டதாரி (1984) - திருமதி பரீதா உம்மா அப்துல் மஹ்றூப் B.com

10. முதல் பெண் ஹாபிழா (1990) - திருமதி பாத்திமா சாக்கிறா முகமட் சாக்கிர் ஹுசைன்

11. முதல் பெண் சட்டத்தரணி (1993) - திருமதி ஆத்திகா நசீர் LLB.Attorney at law

12. முதல் பெண் வைத்தியர் (1995) - DR. அலீமா உம்மா அப்துர்ரஹ்மான் MBBS SL

13. முதல் பெண் பல் வைத்தியர் (1995) - திருமதி சறூபா அப்துஸ்ஸமட் BDS

14. முதல் பெண் தாதி உத்தியோகத்தர்( 1998) - திருமதி F. உம்முல் நிஹாறா முஹம்மட் பழீல்

15. முதல் பெண் அரச நிர்வாக அதிகாரி ( 2000) - திருமதி முஹமட் அலி ஆரிபா SLAS

16. முதல் பெண் பொறியியலாளர் (2007) - திருமதி அப்துல் லத்தீப் பாத்திமா ஷhனாஸ் BSc. Eng (Hons)

17. முதல் பெண் சிறுவர் வைத்திய நிபுணர். (2008) - DR. MI. ரிபாயா MBBS.DCH,MD

18. முதல் பெண் விஞ்ஞான முதுமானி.(2008) - திருமதி MNM. சுரையா MSc

19. முதல் பெண் ஆசிரிய ஆலோசகர் (2009) - திருமதி பரீதா ஸாஹுல் ஹமீத.;

20. முதல் பெண் கலைமுதுமானி.(2015) - திருமதி. அஜீறா கலீல்தீன் MA

இந்நிகழ்வில் மேலும் பல சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -